சென்னை:சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகம் ஆகிய இரண்டு துறைமுகங்களில் நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கண்டெய்னர்கள் லாரிகள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகிறது.
அதிக பாரம் ஏற்றுவது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டெய்னர் லாரிகளுக்கு ரூ.7 லட்சம், ரூ.8 லட்சம் என அபராதம் விதித்தனர். இதற்கு அனைத்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அனைத்து துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு அதிக பாரம் ஏற்றுவது தொடர்பாக கடந்த ஆண்டு அனைத்து துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நேற்று (அக்.9) நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தலைமையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தனி கமிட்டி அமைக்க உத்தரவு
அப்போது நீதிபதி, "கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள், துறைமுக பொறுப்பு கழகத்தினர், தமிழ்நாடு போக்குவரத்து அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு ஆலோசனை நடத்தி அதிக பாரம் ஏற்றுவதை தடுக்க தனி கமிட்டி அமைத்து அதற்கான அறிக்கையை வரும் 27 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து காசிமேட்டில் உள்ள சென்னை துறைமுகத்தில் அனைத்து துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.கோபிநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கண்டெய்னர் லாரியில் அதிக பாரம் ஏற்றுவது ஆண்டாண்டு காலமாக தீராத பிரச்சினையாக உள்ளது.
அனைத்து துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு அதிக பாரம் ஏற்றுவதாக லாரி உரிமையாளர்கள் மீது லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம்.
வழக்கை விசாரித்த நீதிபதி துறைமுக லாரிகளில் அதிக பாரம் ஏற்றவது என்பது தற்போது வியாபாரமாக மாறி உள்ளது. கண்டெய்னர் லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதை தடுக்க தனி கமிட்டி அமைக்க உத்தவிட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் தனி கமிட்டி அதிக பாரம் ஏற்றும் கண்டெய்னர் லாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் என்றும், நீதிபதியின் இந்த உத்தரவை அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்களும் வரவேற்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: மூத்த கன்னட நடிகர் சத்யஜித் காலமானார்!