தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன்னியர் உள் இடஒதுக்கீடு - ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராமதாஸ் - வன்னியர் உள் இடஒதுக்கீடு

வன்னியர்களின் கல்வி - வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Heartfelt thanks to CM STALIN
Heartfelt thanks to CM STALIN

By

Published : Jul 26, 2021, 10:11 PM IST

Updated : Jul 26, 2021, 10:32 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50 % இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டாலும், அதிலும் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மனநிறைவளிக்கிறது. பணி நியமனங்களிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறையாகி விட்டது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.50% நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும்.

வன்னியர்களின் கல்வி - வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7% இடஒதுக்கீடு - அரசாணை வெளியீடு

Last Updated : Jul 26, 2021, 10:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details