சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இரண்டாம் முறையாக கரோனா தடுப்பூசியை முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே போட்டுக்கொண்டார். இதற்கிடையில் சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாள் ஒன்றுக்கு 19 முதல் 20 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 39 ஆயிரத்து 143 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 090 பேர் சுகாதாரப் பணியாளர்கள். 33 ஆயிரத்து 414 பேர் முன்னிலை பணியாளர்கள். 22 ஆயிரத்து 639 பேர் காவல் துறையினர். தமிழ்நாட்டில் 35 இடங்களில் கோவேக்சின் செலுத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.