சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு இடத்தில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. மேலும் சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடுவதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இந்த மழையின் காரணமாக தாம்பரம் அரசு நெஞ்சக மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் குளம் போல் மழைநீர் தேங்கி உள்ளது.
மருத்துவமனை உள்ளே செல்ல முடியாமலும், மருத்துவமனையிலிருந்து வெளியேற முடியாமலும் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் சிரமப்படுகின்றனர்.
தாம்பரம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீ இந்த நிலையில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலர்களிடம் உடனடியாக மின் மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்ற அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழை வெள்ள பாதிப்பில் மக்களுடன் ஸ்டாலின்!