தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா தொற்று - சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு! - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

corona-positive-increase
corona-positive-increase

By

Published : Apr 1, 2020, 7:53 PM IST

இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாங்களே தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, சுய பரிசோதனை செய்து கொள்ளவதற்கு முன்வந்துள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாடு திரும்பியவர்களில், அடையாளம் காணப்படாத நபர்களை அடையாளம் காணும் பணியானது, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 658 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டன.

தொடர்ந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநாட்டில் பங்கேற்றவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் இன்று 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடு, பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 77, 330 பேர் அடையாளம் கண்டறிந்து, அவர்கள் தற்போது வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 81 பேர் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 4,070 பேர் 28 நாள்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 17 கண்டறிதல் மையங்கள் உள்ளன. இவற்றில் 11 அரசு கண்டறிதல் மையங்களும், 6 தனியார் மையங்களும் உள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் மேலும் 6 மையங்கள் அமைக்கப்பதற்கான திட்டமிட்டுள்ளோம். விரைவில் அது செயல்பாட்டுக்குவரும். இதுவரை தமிழ்நாட்டில் 2,726 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 234 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் 110 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவற்றில் பர்மாவைச் சேர்ந்த ஒருவரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவரும் ஆவார்.

தமிழ்நாட்டில் திண்டுக்கல் 17, கரூர் 1, காஞ்சி 2, சென்னை 1, திருவண்ணாமலை 1, திருநெல்வேலி 6 என, 19 மாவட்டங்களில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இவர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, கரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களும் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை கரோனா வைரஸ் சிகிச்சைக்கான வார்டுகளாக மாற்றும் திட்டமும் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஒருவருக்கு கூட கரோனா தொற்று இல்லை: ஈஷா மையம் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details