சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனையில் இன்று மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் கலந்துகொண்டார்.
மருத்துவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பீலா ராஜேஷ்! - அரசு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி
சென்னை: மருத்துவர்கள் தவறு செய்ததாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், சட்டப்பேரவை அறிவிப்பிற்கு இணங்க மருத்துவமனை தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் 133ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டுமென முதலமைச்சசர் உத்தரவிட்டிருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு போதுமான அளவு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது தமிழ்நாட்டில் இல்லை. மருத்துவர்கள் தொடர்ந்து ஒழுங்காக பணி செய்கின்றனரா? என்பதை கண்காணித்து வருகிறோம். சமூக வலைதளம் போன்றவற்றில் மருத்துவர்கள் மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.