இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"தமிழ்நாட்டில் இன்று மட்டும் 98 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 1075ஆக இருந்த நிலையில், கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 12, 746 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டுள்ளது. 33, 85 பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 63,380 பேருக்கு இன்றுடன் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பு முடிந்துள்ளது. 136 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 34 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அதில், 25 அரசு ஆய்வகங்கள், 9 தனியார் ஆய்வகங்கள் ஆகும். மேலும், இரண்டு ஆய்வகங்கள் தனியார் மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது. 65 லட்சம் மூன்றடுக்கு முகக்கவசம் தற்போது இருப்பாக உள்ளது.
என்95 உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. 12 குழுக்கள் மூலம் மாவட்ட வாரியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரேபிட் டெஸ்ட் கிட் இன்னும் ஓரிரு நாட்களில் வந்து சேரும். எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.