தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளியை கண்காணிக்க சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவு! - tamilnadu government

சென்னை: சுகாதாரத் துறையால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகின்றனவா? என சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளி
பள்ளி

By

Published : Jan 17, 2021, 10:04 PM IST

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவி நாயகம் அனைத்து மாவட்ட துணை சுகாதரத் துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி முதல் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது. அப்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதுடன், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி (சானிடைசர்) வைக்கப்பட வேண்டும்.

10,12ஆம் வகுப்பு மாணவர்களின் உடல்நிலையை வாரம் ஒருமுறை மருத்துவக் குழுவினர் அய்வு செய்ய வேண்டும். மேலும் மாணவர்களுக்கு இணை நோய்கள் இருக்கிறதா? என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் கரோனா அறிகுறிகள் தென்படும் மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு தேவையான அளவிற்கு விட்டமின் சி, மல்டி வைட்டமின் மாத்திரைகளை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் அளிக்க வேண்டும்.

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தனியார் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றுகின்றனவா? என்பதை சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கைகளை கழுவதற்கான போதுமான குடிநீர் வசதிகளையும், சுகாதாரத்தையும் உள்ளாட்சி நிர்வாகம், பள்ளி நிர்வாகம் இணைந்து ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகளை துணை இயக்குநர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 10,12ஆம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாட திட்டங்கள் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details