தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலுவலகப் பணியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் - chennai latest news

அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

health-ministry-new-regulations
health-ministry-new-regulations

By

Published : Jan 19, 2022, 3:12 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தினசரி கரோனா பாதிப்பு என்பது 20 ஆயிரத்தைக் கடந்துவிட்ட நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், தற்போது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், அலுவலகப் பணியாளர்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும். அலுவலகப் பணியாளர்களின் குடும்பத்தினரும் இரு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறை அறிவுரை கூறியுள்ளது.

இதையும் படிங்க : வடசென்னையில் 15 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details