தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை: அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

By

Published : Oct 19, 2020, 10:28 PM IST

ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று (அக். 19) பார்வையிட்டனர்.

மருத்துவப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர் உள்பட அனைவரும் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு எக்ஸ்ரே சிடி ஸ்கேன் உள்ளிட்ட அனைத்தையும் பரிசோதனை செய்து குணமடைவதற்கு மருத்துவம் அளிக்கின்றனர்.

ஆனால் ஒருபோதும் தங்களை அவர்கள் சோதனை செய்துகொள்வதில்லை என்பதனால் சுகாதாரப் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யும்விதமாக ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் உள்ள வளாகத்தில் பரிசோதனை மையம் நடத்தப்பட்டுவருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

இதில் சுகாதாரத் துறை பணியில் ஈடுபடும் அனைவரும் கலந்துகொண்டு உடல் பரிசோதனை செய்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்விடுத்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, "சுகாதாரப் பணியில் முழு அர்ப்பணிப்போடு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர், துணை மருத்துவர்கள் என அனைவரையும் பாதுகாக்கும் முன்னிட்டு சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதனை முகாமை தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.

இதில் பிபி, சுகர், இசிஜி, சிடி ஸ்கேன், கேன்சர், பெண்களுக்கான மார்பக புற்று நோய்க்கான பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் ஒரே இடத்தில் செய்யப்பட்டன. மேலும் இதுவரையில் தமிழ்நாடு முழுவதும் 46 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 58 ஆயிரம் பேர் தன்னார்வலர்கள் தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொண்டு இருக்கின்றனர். அதில் ஒருவருக்கு கூட பின்விளைவுகள் ஏற்படவில்லை. மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை மற்ற தீர்மானங்களோடு ஒப்பிட வேண்டாம். விரைவில் ஆளுநரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரம்மி விளையாட்டில் பணம் இழந்தவரின் சோக முடிவு! கடைசி நிமிடத்தில் மனைவிக்கு அனுப்பிய ஒலிப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details