சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிறவி குறைபாடு நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (செப்.25) திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “அரசு மருத்துவமனைகளில் எந்தவித தடையும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் குழந்தைகளின் சிகிச்சைகளின் மீது தனிக்கவனம் செலுத்திவந்தோம்.
பிறவி குறைபாடுகளை கண்டறிந்து, சிகிச்சையளிக்கும் விதமாக அனைத்துப் பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்களும் இங்கு குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க பணியாற்றி வருகின்றனர். குழந்தைகள் விரும்பும் வகையில் இந்த மருத்துவ மையம் உள்ளது. கீழ்ப்பாக்கத்தை தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் இந்த சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.