கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளுக்கு சென்று தமிழ்நாடு திரும்பியவர்களை வீட்டில் தனிமைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதனையொட்டி வெளிநாடு சென்று திரும்பி, தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்ட 9 ஆயிரத்து 424 பேரின் இல்லங்களில் இன்று மாலைக்குள் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நிறைவுபெறும். மக்கள் நலன் கருதி இவர்கள் இல்லங்களிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கவேண்டும்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வெளியில் திரிந்தால் பாஸ்போர்ட் முடக்கம் - விஜய பாஸ்கர்
சென்னை: கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனவும், அவர்கள் வெளியே சுற்றினால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வெளியே சுற்றினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரித்துள்ளார்
அரசின் உத்தரவை மீறி பொதுவெளியில் நடமாடுபவர்களை அரசு தேடி வருகிறது. அவ்வாறு வீட்டைவிட்டு வெளியில் சென்று நடமாடினால் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் பாஸ்போர்ட் முடக்கம் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Last Updated : Mar 23, 2020, 3:15 PM IST