மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடப்பாண்டு மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வெளியிட்டார்.
அரசு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கு தனி தரவரிசை பட்டியல் என மூன்று தரவரிசை பட்டியல்களும் வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஒட்டுமொத்தமாக முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்களை அமைச்சர் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ’24 ஆயிரத்து 712 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பம் செய்ததில் 23 ஆயிரத்து 707 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14 ஆயிரத்து 511 மாணவர்கள் விண்ணப்பத்தில் 14 ஆயிரத்து 276 மாணவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அரசு பள்ளியில் படித்த மாணவர்களில் 7.5விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு 972 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 951 மாணவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசை மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்பார்