தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன - மன்சுக் மாண்டவியா புகழாரம் - தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடக்க விழா

நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் செயல்படுவதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன - மன்சுக் மாண்டவியா புகழாரம்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன - மன்சுக் மாண்டவியா புகழாரம்

By

Published : Jan 13, 2022, 7:35 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான புதிய கட்டடம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக நேற்று (ஜன.12) திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலின், மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டார்.

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடக்க விழாவில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வரவேற்புரையாற்றிய மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்த செலவில் மருத்துவக் கல்வி வழங்குவதை ஊக்குவித்து, சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையின் படி தமிழ்நாட்டில் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடக்க விழா

கூடுதல் மருத்துவ இடங்கள்

ஒவ்வொரு கல்லூரியும் தலா ரூ.325 கோடி செலவில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு மேலும் ஆயிரத்து 450 மருத்துவ இடங்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடக்க விழா

தரமான மருத்துவ சேவை

கடந்த ஏழரை ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவுக்கு மருத்துவத் துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருப்பதாக அவர் கூறினார். பிரதமர் மோடியின் வலிமையான தலைமையின் கீழ், குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் அனைவருக்கும் கிடைக்க செய்யும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடக்க விழா

கோவிட் 19 பெருந்தொற்று சவாலை நாடு எதிர்கொண்ட போது, இரண்டு அவசர கால கோவிட் தொகுப்புகளை மோடி அரசு வழங்கியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஈசிஆர்பி-1-ன் கீழ், ரூ.712 கோடியும், ஈசிஆர்பி-2-ன் கீழ் ரூ.798 கோடியும், தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் அமைக்க மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

அதிவேகத்தில் மருத்துவக்கல்லூரிகள்

2014-க்கு முன்பு புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க பல ஆண்டுகள் ஆன நிலையில், பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில், மத்திய – மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால் மருத்துவக் கல்லூரிகள் அதிவேகத்தில் திறக்கப்படுவதாகக் கூறினார்.

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடக்க விழா

மேலும், தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, மத்திய நிதியுதவியுடன் கூடிய திட்டத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளதாகவும், இதற்கான மொத்த செலவு ரூ.3,575 கோடியில் மத்திய அரசின் பங்காக ரூ.2,145 கோடியும், எஞ்சிய தொகை மாநில அரசின் பங்காக விடுவிக்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்

இதையும் படிங்க: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் - மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஸ்டாலின் மனு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details