சென்னை:காஞ்சிபுரம் - மதுரமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (செப்.17) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர் பணியில் இல்லாத நிலையில், வருகை பதிவேட்டில் அவரது கையொப்பம் மட்டும் இருந்துள்ளது. அப்போது அமைச்சர், மருத்துவரை அலைபேசியில் அழைத்து கேட்டதற்கு ஆயுஷ் நிகழ்ச்சி மாற்றுப் பணியில் இருந்ததாகக் கூறியுள்ளார்.
'பணியில் இல்லாத மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு! - health minister
காஞ்சிபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணியில் இல்லாத மருத்துவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
!['பணியில் இல்லாத மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு! பணியில் இல்லாத மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-09-2023/1200-675-19536313-thumbnail-16x9-knj.jpg)
Published : Sep 17, 2023, 4:14 PM IST
மேலும் மதுரமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவித்த தாய்மார் ஒருவரும் மற்றும் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட ஒருவரும் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில், மருத்துவர் பணியில் இல்லாமல் கூறும் காரணம் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:'காவிரி பிரச்னையில் முதலமைச்சர் நாடகம் ஆடுகிறார்'- வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!