தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை? - தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு

ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

new year celebrations in tamilnadu
new year celebrations in tamilnadu

By

Published : Dec 28, 2021, 12:53 PM IST

சென்னை: எழும்பூர் கண் மருத்துவமனையில், மாவட்ட பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ வாகனங்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் கொடியசைத்து இன்று (டிச.28) தொடங்கி வைத்தனர்.

நடமாடும் கண் மருத்துவ வாகனங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றான மாவட்ட பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ வாகனங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பார்வை குறைபாடு 1.9 விழுக்காடாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.8% ஆக உள்ளது. இதனையும் குறைக்கும் வகையில் இந்த வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வீட்டை விட்டு பொதுவெளிக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

மேலும் 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி

உருமாறிய கரோனா தொற்று ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை மக்கள் தவிர்க்க வேண்டும். ஒன்றிய அரசும் அதையே அறிவுறுத்தி உள்ளது. நட்சத்திர விடுதிகளில் இதுவரை புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து அறிவிக்கவில்லை. இது மகிழ்ச்சியளிக்கிறது.

நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றால் கண்காணிக்கப்படும். தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 34 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. இதில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 5 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் மேலும் 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரது மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பற்றி தெரியவரும்" என்று கூறினார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கங்குலிக்கு கரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details