சென்னை: தமிழ்நாட்டில் Omicron பாதிப்புகள் குறித்தும், பரவல் குறித்தும் ஆய்வு செய்வதற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள மத்திய அரசின் மருத்துவக் குழு வல்லுநர்கள் வனிதா, புர்பசா, சந்தோஷ் குமார், தினேஷ் பாபு ஆகியோருடன் சென்னை பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
அதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "தமிழ்நாடு அரசு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்தியக் குழுவினருடன் எடுத்துக் கூறப்பட்டது. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை இயக்கினால் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் எனவும், அதனை இயக்குவது குறித்து மத்திய அரசிடம் குழுவினர் தெரிவிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாட்டில் 97 பேருக்கு எஸ். ஜீன் டிராப் என ஒமைக்ரான் அறிகுறி வந்துள்ள நிலையில், இவர்கள் அனைவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது. 34 பேருக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.