தமிழ்நாட்டில் இரண்டாவது கரோனா அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளின் முன் கரோனா தொற்று நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் இதே நிலை நீடித்து வந்தது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தாமதமின்றி சிகிச்சை அளிக்கும் வகையில் ஸீரோ டிலே வார்டு (Zero Delay ward) இன்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கூடுதலாக 136 படுக்கை வசதிகள் கொண்ட இந்த வார்டை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஏற்கனவே, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக, 1914 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.