சென்னை:மகாராஷ்டிரா, மும்பை, கேரளா, டெல்லி, சென்னை ஆகிய ஐந்து மண்டலங்கள், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும்; கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பொது நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மகாராஷ்டிரா, மும்பை, கேரளா, டெல்லி, சென்னை ஆகிய ஐந்து மண்டலங்களிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நிகழ்ச்சிகளில் ஒருவக்கு ஏற்படும் தொற்று காரணமாக குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அதனைத் தடுப்பதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.