தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பத்தாம் வகுப்பு தேர்வு குளறுபடிக்கு தலைமை ஆசிரியர்கள் காரணம்’ - தேர்வுத்துறை விளக்கம்! - கல்வித் துறை ஆணையர்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள்தான் காரணம் என தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

headmasters-are-responsible-for-the-10th-class-exam-mess-exam-department-explanation
headmasters-are-responsible-for-the-10th-class-exam-mess-exam-department-explanation

By

Published : Aug 13, 2020, 7:32 PM IST

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடப்பட்டன . இதில் பள்ளி இடைநிற்றல் மாணவர்கள், காலாண்டு, அரையாண்டு தேர்வு முற்றிலும் எழுதாத மாணவர்கள், பள்ளிக்கு வராத மாணவர்களுக்கும் சேர்த்து ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த மாணவர்களுக்கு எப்படி ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது என்பது குறித்து தேர்வுத்துறை அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

இதற்கு விளக்கமளித்த தேர்வுத்துறை அலுவலர்கள், பொதுத்தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு காரணம் தலைமை ஆசிரியர்கள் என்றும் , அவர்கள் கொடுத்த பட்டியலின் அடிப்படையில் மட்டுமே ஹால் டிக்கெட்டுகள் தயாரித்து வழங்கப்பட்டன என்றும் பதிலளித்துள்ளனர்.

இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குளறுபடிக்கு காரணமான, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details