சென்னை:செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92.13 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ரூ. 9 கோடியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம் மற்றும் நிறைவு விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது.