சென்னை: பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, பல் மருத்துவ கல்லூரிகள், 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அரசு மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட வேண்டும். இந்த விதிகளை மீறியதாகக் கூறி, திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்ததுடன், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் இருந்தும் கல்லூரி நீக்கப்பட்டது.
இதை எதிர்த்து ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், "எங்கள் கல்லூரி 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பூதப்பாண்டி அரசு மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில - தேசிய நெடுஞ்சாலை மாற்றம் காரணமாக 16 கிலோ மீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனை உள்ளதாக கூறி எங்கள் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.