தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குயின்' இணையதளத் தொடருக்கும், 'தலைவி' திரைப்படத்துக்கும் தடையில்லை!

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் 'தலைவி' திரைப்படம் மற்றும் 'குயின்' இணையதளத் தொடரை வெளியிட தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jayalalithaa biopic case
Jayalalithaa biopic case

By

Published : Dec 12, 2019, 5:05 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் "தலைவி" என்ற தமிழ்ப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதளத் தமிழ்த் தொடரை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் எடுக்கப்படும் தலைவி, ஜெயா, குயின் ஆகியவற்றை தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்கக் கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, 'குயின்' இணையத் தொடரில் தீபா குறித்து எந்தக் காட்சியும் இடம் பெறவில்லை என இயக்குநர் கெளதம் மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, தலைவி திரைப்படம், 'தலைவி' என்ற பெயரில் வெளியான புத்தகத்தைத் தழுவி எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்தப் புத்தகத்துக்கு இதுவரை தடை ஏதும் கோரப்படவில்லை என்றும்; தீபா ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என இயக்குநர் விஜய் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், "தீபா குறித்த காட்சிகள் இணையதளத் தொடரில் இடம்பெறாது என்கிற உத்திரவாதத்தை ஏற்று கொள்கிறோம். எனவே, 'குயின்' இணையதளத் தொடரையும் 'தலைவி' திரைப்படத்தையும் வெளியிடத் தடையில்லை" என உத்தரவிட்டார்.

மேலும் 'தலைவி' திரைப்படத்தில் 'இது கற்பனைக் கதை' என அறிவிப்பையும் வெளியிட உத்தரவிட்டு, நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: முடிந்தது பேரறிவாளனின் பரோல்... மீண்டும் கிடைக்குமா?

ABOUT THE AUTHOR

...view details