தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய அமலாக்கப்பிரிவின் சம்மன் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு - Fraud by claiming to hire drivers and conductors

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய அமலாக்கப்பிரிவின் சம்மன் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய அமலாக்கப்பிரிவின் சம்மன் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு

By

Published : Sep 1, 2022, 10:24 PM IST

Updated : Sep 1, 2022, 10:45 PM IST

சென்னை:கடந்த 2011 -15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 3 வழக்குகளைப்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், இந்த மோசடியில் சட்டவிரோதப் பணம் பரிமாற்றம் தொடர்பாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் 2021ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை எதிர்த்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த மனு நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மாநில போலீசார் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ள நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அமலாக்கப்பிரிவு கோரிய ஆவணங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசு அல்ல.. திருப்பி அடிப்பேன்.. அண்ணாமலை

Last Updated : Sep 1, 2022, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details