திருநெல்வேலியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் உள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் இந்து அறநிலையத் துறை மேற்பார்வையில் உள்ள வழிபாட்டுத்தலங்களுக்கு மின் கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்காத வழிபாட்டுத் தலங்களுக்கு வணிக கட்டடங்களுக்கு பெறப்படும் மின் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான இந்து வழிபாட்டுத் தலங்கள் மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் வணிக கட்டடங்களுக்கு வசூலிக்கப்படும் தொகையே மின் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.எனவே ஏற்கனவே உள்ள கட்டண விவரங்களை நீக்கி அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தைவசூலிக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.