தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முறையான சாலை அமைக்கும் வரை 50% சுங்கக் கட்டணத்தை பெறலாமே? - உயர் நீதிமன்றம் - high court chennai

சென்னை: மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜா வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை முறையாக அமைக்கும் வரை 50 சதவீத சுங்கக் கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

HC
HC

By

Published : Nov 28, 2019, 5:01 PM IST

சென்னை மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜா வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், அது முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் கூறி நவம்பர் 22ஆம் தேதி நீதிபதி சத்தியநாரயணன் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில் மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜா வரை மீண்டும் சாலை அமைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு, சாலை பராமரிப்பு தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக நெடுஞ்சாலை துறை ஆகியவற்றை டிசம்பர் 9ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும்,மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜா வரை உள்ள சாலையை முறையாக அமைக்கும் வரை, 50 சதவீத சுங்க கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details