தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெரினா கடற்கரையில் பொது மக்களுக்கு அனுமதி? அரசு பதிலளிக்க உத்தரவு! - மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி

கரோனா ஊரடங்கிற்குப் பின் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும்நிலையில், மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொது மக்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என, தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

marina beach cleaning issue
சென்னை மெரினா கடற்கரை

By

Published : Sep 29, 2020, 4:51 PM IST

சென்னை:கரோனா ஊரடங்கிற்குப் பின் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும்நிலையில், மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொது மக்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என, மீனவர் நலன் அமைப்பின் பீட்டர் ராயன் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவ்வழக்கில் மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பது, லூப் சாலையில் உள்ள மீன் அங்காடியை முறைப்படுத்துவது குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு துறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மெரினா கடற்கரையில் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், பொது மக்களை இன்னும் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடற்கரைகளில் பொது மக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அவ்விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது. அதேசமயம் பொது மக்களை அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை அக்டோபர் 5ஆம் தேதி தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட கடைகளுக்குப் பதிலாக புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்தளவில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சேகர் ரெட்டி வழக்கை முடித்து வைத்த சிபிஐ நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details