நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோயில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் திருக்கோயில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளுக்கு முரணாக, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படுவதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கோயில்களின் அறங்காவலரின் பெயர், தொழில், சுய வருமானம், கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளின் ஞானம், கோயில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடாதவரா, அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றக்கூடியவரா போன்ற விவரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள நாளிதழ்களில் பொது அறிவிப்பாக வெளியிட்டு, கோயில் அலுவலகங்களில் பக்தர்கள் பார்வைக்கு வைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.