சென்னை: ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வழக்கை உயர் நீதிமன்றதுக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், இரு வாரங்களில் வழக்கை முடிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வேறு நீதிபதி புதிதாக வழக்கை விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று ஏற்கனவே இரண்டு முறை இதுதொடர்பான வழக்கை விசாரித்து உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, புதிதாக வழக்கை விசாரிக்க நீதிபதியை நியமிக்கும் வகையில், வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தார்.