தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரவாயல் - வாலாஜா இடையேயான இரண்டு சுங்க சாவடிகளில் 50% கட்டணம் பொங்கல் வரை நீட்டிப்பு - மதுரவாயல் வாலாஜா தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு விவகாரம்

சென்னை: மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே சாலைகளை முறையாக பராமரிக்காத இரண்டு சுங்கச்சாவடிகளில், 50 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பொங்கல் பண்டிகை வரை நீட்டித்துள்ளது.

By

Published : Dec 21, 2020, 9:42 PM IST

சென்னையை அடுத்த மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரித்து வருகிறது.

இதில், முறையாக சாலையை பராமரிப்பு செய்யாததால் மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே உள்ள 2 சுங்கச்சாவடியில் இரண்டு வாரத்துக்கு 50 சதவீத டோல் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று (டிச. 21) விசாரணைக்கு வந்தபோது, "சாலைகள் கண் துடைப்புக்காக மட்டுமே பராமரிப்பு பணி நடைபெற்றதாக நீதிபதிகள்" குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

மேலும், தான் வேலூர் சென்று வந்தபோது, சாலைகள் குண்டும் குழியுமாக அதே நிலையில் பார்த்ததாக நீதிபதி சத்தியநாராயணன் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

மதுரவாயல் - வாலாஜா சாலை எப்போது அமைக்கப்பட்டது? எப்போது மீண்டும் அமைக்கப்பட்டது? முறையாக பராமரிக்காத சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க எந்த சட்டம் வகைவகை செய்கிறது? லோனாவாலா, ஆக்ரா நெடுஞ்சாலைகள் மட்டும் தான் தேசிய நெடுஞ்சாலைகளா?

முறையாக பராமரிக்கப்படாததால் மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீதம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பொங்கல் பண்டிகை வரை நீட்டித்தனர்.

இதையும் படிங்க: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details