காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி பெரம்பூரைச் சேர்ந்த தென்னிந்திய இந்து மகா சபை தலைவர் வசந்தகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், "அத்திவரதரை 48 நாட்களுக்கு பிறகு மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என எந்த ஆகம விதியும் இல்லை. எந்த ஒரு ஆகம விதியும் இல்லாத காரணத்தினால் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது - உயர் நீதிமன்றம் திட்டவட்டம் - Athithivaradar Darshan
சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகமவிதிப்படி 48 நாட்களில் அத்திவரதரை குளத்திற்குள் வைப்பது மரபு என தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'மரபு, வழிபாடு நடைமுறைகளின்படியே அத்திவரதர் 48 நாட்கள் தரிசனம் நடைபெறுகிறது. கோயில்களின் மரபு, வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க உத்தரவிட முடியாது' எனக் கூறிய உயர் நீதிமன்றம்,தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்று தரிசனத்தை நீட்டிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது.