தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தியாகிகள் குடும்ப ஓய்வூதியத்தை உரிய வாரிசுக்குத்தர பரிசீலிக்கும்படி கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கோரி சுதந்திரப்போராட்ட வீரரின் மகள் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க, கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தியாகிகள் குடும்ப ஓய்வூதியத்தை பரிசீலிக்க கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தியாகிகள் குடும்ப ஓய்வூதியத்தை பரிசீலிக்க கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

By

Published : Aug 15, 2022, 9:05 PM IST

சென்னை: கோவையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் நாராயணன் நம்பியார், தியாகிகள் ஓய்வூதியம் பெற்று வந்த நிலையில், 1992இல் மரணமடைந்தார். அதன்பின் அவரது மனைவி கல்யாணியம்மா, தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தார். கடந்த 1995ஆம் ஆண்டு அவர் இறந்த நிலையில், தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியத்தை வழங்கக் கோரி அவரது மகள் வல்சலா அரசுக்கு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், கடந்த 2011ஆம் ஆண்டு தனது கணவர் இறந்துவிட்டதாகவும், அவரது வருமானத்தை மட்டும் நம்பி இருந்த நிலையில் தற்போது எந்த வருவாயும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது தந்தை நாராயணன் நம்பியாரின் ஒரே வாரிசாக உள்ள தனக்கு தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும் எனக்கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வல்சலாவின் கோரிக்கை மனுவை எட்டு வாரங்களில் பரிசீலிக்கும்படி கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் பெற வல்சலாவுக்கு தகுதி இருந்தால், அவருக்கு பென்ஷன் வழங்க மத்திய உள்துறைக்கு அவரது பெயரை பரிந்துரைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:75ஆவது சுதந்திர தினம்: கோவை மண்ணின் விடுதலைப் போராட்ட தடங்கள்

ABOUT THE AUTHOR

...view details