தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு உதவிகள் வழங்க உத்தரவு! - வனக்குற்றங்கள்

தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது உள்ளிட்ட வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டுமென தமிழ்நாடு தடயவியல் ஆய்வகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Direct SIT to prevent actions to Ivory poaching for national trade, MHC
Direct SIT to prevent actions to Ivory poaching for national trade, MHC

By

Published : Aug 1, 2022, 6:40 PM IST

சென்னை: தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது உள்ளிட்ட வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வனத்துறை, காவல் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது சம்பந்தமான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, சிறப்பு புலனாய்வுக்குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் யானை தந்தங்கள் விற்பனை, யானை வேட்டை தொடர்பான 10 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்குகள் விசாரணைக்காக தமிழ்நாடு தடயவியல் ஆய்வக தொழில்நுட்ப உதவிகளை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல கர்நாடகா மாநிலம் சம்பந்தப்பட்ட சில வழக்குகள் உள்ளதால், கர்நாடக பொறுப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டுமென அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பொறுப்பு அலுவலர் நியமிப்பது தொடர்பாக பதிலளிக்கும் படி, கர்நாடகா மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச்செயலாளரை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர்.

மேலும் வனக்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழுவுக்குத்தேவையான தொழில்நுட்ப உதவிகளை தடயவியல் ஆய்வகம் இலவசமாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கலமச்சேரி பேருந்து எரிப்பு வழக்கு - இருவருக்கு 7 ஆண்டுகள், ஒருவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!

ABOUT THE AUTHOR

...view details