2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு முன் 340 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை சிமெண்ட் விலை 13.23 விழுக்காடு அதிகரித்து, தற்போது 395 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் சிமெண்ட்டிற்கு விலை நிர்ணயிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிமெண்ட் விலையை நிர்ணயிப்பது தொடர்பாக கொள்கை முடிவெடுக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கருத்தில் கொள்ளாமலும், நியாயமான விலை நிர்ணயிக்கக் கோரிய தன்னுடைய மனுவையும் நிராகரித்த தமிழ்நாடு அரசு, குறைந்த விலையில் சிமெண்ட் விற்கும் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் அல்லது அம்மா சிமெண்ட்டை வாங்கும்படி தெரிவிப்பதாக மனுவில் புகார் கூறப்பட்டுள்ளது.