சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த, குள்ள படையாச்சி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், 'தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கிறார்கள். ரசீது கொடுக்காமல் பாட்டில் ஒன்றை ரூ. 70க்கும் மேல் விற்பனை செய்கிறார்கள். அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதால் மதுப் பிரியர்கள் தங்கள் வீடுகளில் மனைவிகளின் நகைகளை அடமானம் வைத்து மது வாங்குவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு டாஸ்மாக் நிறுவன விதிப்படி அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்களை விற்க வேண்டும். அதிக விலைக்கு விற்க தடை விதிக்க வேண்டும். கடைகளில் விலைப் பட்டியல் ஒட்ட உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா, சுமந்த் ஆகியோர் அமர்வு, மதுபானங்கள் கொள்முதல் செய்யும் பொழுது தரமானதாக இருக்கிறதா என்று அரசு சரிபார்த்து கொள்முதல் செய்கிறதா? இதற்கு ஆதாரம் உள்ளதா? இதுவரை எப்படி கொள்முதல் செய்தீர்கள்? அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா? என்ற அறிக்கை அளிக்க வேண்டும்.
மேலும், மதுபானம் விற்கும்போது வாடிக்கையாளருக்கு ரசீது கொடுக்கப்படுகிறதா? ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா? அதிக விலைக்கு மதுபானம் விற்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்ற கேள்விகளுக்கு ஜூன் 2ஆ5ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க... டாஸ்மாக்கில் 'குடி'மகள்கள்: வைரலாகும் காணொலி