தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 3.5 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்! - ஹவாலா பணம்

சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கடைகளில் வருமான வரித்துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 3.5 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Hawala  சென்னையில் ரூ. 3.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்  3.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்  சென்னை ஹவாலா பணம்  Hawala Money Seized In Chennai  Hawala Money Seized  Hawala Money  ஹவாலா பணம்  Chennai Lattest News
Hawala Money Seized In Chennai

By

Published : Mar 17, 2021, 7:56 AM IST

சென்னை, பூக்கடையில் நாராயண முதலியார் தெருவில் உள்ள ஒரு ஹார்டுவேர் கடையில் வருமானத்திற்கு அதிகமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித் துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், வருமான வரித்துறை அலுவலர்கள் அந்தக் கடைக்குச் சென்று சோதனை நடத்தியதில், கணக்கில் வராத இரண்டு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அந்தத் தொகை குறித்து வருமானவரித்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டபோது, அதே பகுதியில் ஏகாம்பரம் தெருவில் அமைந்துள்ள இரண்டு ஸ்டீல் கடைகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. அதன்பேரில், வருமான வரித்துறை அலுவலர்கள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டபோது இரண்டு ஸ்டீல் கடைகளிலும் 1.5 கோடி ரூபாய் ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இருகடைகளிலும் இருந்த 3.5 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஹவாலா பணம் எனத் தெரிய வந்தது. மேலும் இந்த ஹவாலா பணம் யாருக்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டுள்ளது என்ற கோணத்திலும் வருமான வரித்துறை அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:வருமான வரிச்சோதனையில் சிக்கிய 3300 கோடி ரூபாய் ஹவாலா பணம்!

ABOUT THE AUTHOR

...view details