சென்னை:மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியிலிருந்து விரைவு ரயில் ஒன்று நேற்று (ஆகஸ்ட் 28) மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில்வே காவல்துறையினர் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த ரயிலில் வந்த மராட்டியத்தைச் சேர்ந்த சங்கர் ஆனந்தரா என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.37 லட்சம் பறிமுதல் - Chennai Central Railway Station
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், தனி அறைக்கு கூட்டி சென்று சோதனை செய்தபோது, அவரின் சட்டைக்குள் கட்டு கட்டாக பணம் மறைந்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.37 லட்சம், இந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. முதல்கட்ட தகவலில் இது ஹவாலா பணம் என்பது தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:காருக்குள்ளே ரகசிய அறை; கடத்தி வந்த ஹவாலா பறிமுதல்