தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூக்கம் உங்கள் கண்களை தழுவவில்லையா..? டைப் 2 நீரழிவு உங்களை தாக்கலாம்.. - தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மக்கள் இரவில் நன்கு தூங்குவதற்கு மக்களை ஊக்குவிக்கின்றனர். ஏனெனில் சரியான தூக்கமின்மை டைப் 2 நீரிழிவுக்கான ஆபத்து காரணிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

தூக்கம் உங்கள் கண்களை தழுவவில்லையா..? டைப் 2 நீரழிவு உங்களை தாக்கலாம்..
தூக்கம் உங்கள் கண்களை தழுவவில்லையா..? டைப் 2 நீரழிவு உங்களை தாக்கலாம்..

By

Published : Dec 3, 2022, 12:50 PM IST

வாஷிங்டன்: தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மக்கள் இரவில் நன்கு உறங்கவில்லை என்றால் டைப் 2 நீரழிவினால் பாதிக்கப்படுவதற்கான காரணிகள் அதிகரிப்பதாக புதிய ஆராய்ச்சி மூலம் தெரியவந்திருப்பதாக கூறுகின்றனர்.

இந்த வகையான ஆய்வில், சரியான தூக்கமின்றி தவிக்கும் நபர்கள் சராசரியாக மோசமான கார்டியோமெடபாலிக், குடல் பாதிப்பு, கொழுப்பு மற்றும் உடல் எடை ஆகியவை அதிகரித்து டைப் 2 நீரிழிவு நோய்க்கு காரணமாக அமையும்.

ஆஸ்திரேலியாவில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பெரியவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் உள்ளது. உலகளவில், டைப் 2 நீரிழிவு நோயினால் 422 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

UniSA ஆராய்ச்சியாளர் டாக்டர் லிசா மெட்ரிசியானி கூறுகையில், தூக்கத்தின் வெவ்வேறு அம்சங்கள் நீரிழிவு நோய்க்கான ஆபத்து காரணிகளுடன் தொடர்புடையவை. "உறக்கம் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் தூக்கத்தைப் பற்றி சிந்திக்கும்போது, நாம் எவ்வளவு மணிநேரம் தூங்குகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்,"என கூறுகிறார்.

மேலும்"நாம் எவ்வளவு நன்றாக உறங்குகிறோம், படுக்கைக்குச் சென்று எழும்பும்போது, நமது தூக்கப் பழக்கவழக்கங்கள் எவ்வளவு சீராக இருக்கின்றன என்பது, தூக்கத்தின் கால அளவைப் போலவே முக்கியமானதாக இருக்கலாம். இந்த ஆய்வில், தூக்கத்தின் பல்வேறு அம்சங்களையும், ஆபத்து காரணிகளையும் ஆராய்ந்தோம்.

நீரிழிவு நோய், மற்றும் தூக்கம் தொந்தரவு உள்ளவர்களுக்கும் டைப் 2 நீரிழிவு அபாயத்தில் உள்ளவர்களுக்கும் இடையே ஒரு தொடர்பை கண்டறிந்தது. 44.8 வயதுடைய சராசரி வயதுடைய 1000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய பெரியவர்களை இந்த ஆய்வு மதிப்பீடு செய்தது. தூங்குவதில் சிக்கல், கால அளவு, நேரம், செயல்திறன் மற்றும் நாள் முதல் நாள் தூக்க நீள மாறுபாடு என ஆராய்ச்சியாளர்கள் பலவிதமான தூக்க குணாதிசயங்களை ஆய்வு செய்தனர்.

தூங்குவதில் சிக்கல் இருப்பதாகப் புகாரளித்தவர்கள் அதிக உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் மற்றும் குடல் அலர்ஜி பாதிப்புகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நமது தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தூக்கம் குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை, ஆனால் தூக்கத்தைப் பற்றி ஒரு அம்சமாக மட்டும் சிந்திக்காமல், ஒட்டுமொத்தமாக சிந்திக்க வேண்டியது அவசியம்” என டாக்டர் மெட்ரிசியானி கூறினார்.

இதையும் படிங்க:தூக்கமின்மையை போக்கும் "ஸ்மார்ட் தலையணை" - மாணவரின் சூப்பர் கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details