சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஹாத்ராஸ் சம்பவத்தை பொறுத்தவரை யோகி ஆதித்யநாத் ஏற்கனவே வழக்கை எஸ்.ஐ.டி. மூலம் விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி தற்போது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். இதுவே பாஜகவின் நிலைப்பாடு. இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகளை வைத்து மொத்த சட்ட ஒழுங்கையும் குறை சொல்லக் கூடாது. இதை வைத்து அரசியல் செய்யக் கூடாது” என்றார்.