ராஜரிஷி இயக்கத்தில் ஹரிக்குமாரின் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் "மதுரை மணிக்குறவன்". இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படத்திற்கு முத்துலிங்கம் பாடல்களை எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளராக டி.சங்கர், படத்தொகுப்பு பணிகளை வி.டி.விஜயன் செய்துள்ளார். மேலும், ஜாக்குவார் தங்கம், விஜய் ஜாக்குவார் ஆகியோர் ஸ்டண்ட் பணிகளை செய்துள்ளனர்.
இப்படம் அண்ணன் தம்பி இருவரின் பகைமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இறந்து விடுகின்றனர். நிறைமாத கர்ப்பிணியான அண்ணனின் மனைவி இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுவிட்டு இறந்து விடுகிறாள்.
அநாதையாக்கப்பட்ட இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை அந்த வீட்டு பணிப்பெண் வளர்க்கிறாள். மற்றொரு குழந்தையை காவலர் ஒருவர் வளர்க்கிறார். இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு நிலுவையில் உள்ள கொலைக்குற்றங்களை கண்டுபிடிக்க சிறப்பு காவல்துறை அலுவலர் அந்த ஊருக்கு வருகிறார்.
விசாரணையில் இறந்து போனவர்கள் தன் அப்பாவும், சித்தப்பாவும் என்று தெரியவர மனமுடைகிறார். அதே நேரம் தன் கூடப்பிறந்தவர் மதுரையில் இருக்கிறார் எனத் தெரிந்தபின் பெரு மகிழ்ச்சி அடைகிறார். இந்தக் கொலைக் குற்றங்களை செய்தது யார்? தன் உடன்பிறந்த சகோதரனை சந்தித்தாரா? என்பதை திடீர் திருப்பங்களுடன் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் சொல்லும் கதைதான் மதுரை மணிக்குறவன்.
காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் G. காளையப்பன் படத்தை தயாரித்ததுடன், மிரட்டும் வில்லனாகவும் நடித்துள்ளார். மாதவிலதா கதாநாயகியாக வருகிறார். இப்படத்தில், சுமன், பருத்திவீரன் சரவணன், குணச்சித்திரங்களாக ராதாரவி, கெளசல்யா, ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், ஓ.ஏ.கே சுந்தர், அனுமோகன் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் உள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனி, குரங்கினி, சுருளி, பாகனேரி, புல்வநாயகி அம்மன் கோயில் போன்ற இடங்களில் 45 நாள்கள் இரண்டாம் கட்டமாக நடந்து முடிந்துள்ளது. படத்தில் 6 பாடல்களும் 8 சண்டை காட்சிகளும் உள்ளன.
இதையும் படிங்க: அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் வேலுமணி வழக்கு தள்ளுபடி