உத்தரப் பிரதேசத்தில் பட்டியலின பெண்ணைக் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த வெறியர்களை தூக்கிலிடக் கோரியும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலும் பிஜேபி யோகி அரசைக் கண்டித்தும் சென்னை பல்லாவரம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், தலைமை நிர்வாக்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஹனிபா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.