தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கலைஞரை கவர்ந்த பனகல் அரசர்’ ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து - ஸ்டாலின்

நீதிக்கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.

’கலைஞரை கவர்ந்த பனகல் அரசர்’ ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
’கலைஞரை கவர்ந்த பனகல் அரசர்’ ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

By

Published : Jul 9, 2022, 3:21 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட மாடலின் முதல் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த நீதிக்கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாள் இன்று! சமூகநீதிக்கு அடித்தளமிட்ட Communal GO-க்கு வழியமைத்தவர்.

வழிபாட்டு உரிமையைக் காக்கின்ற வகையில் இந்து அறநிலையச் சட்டத்தை நிறைவேற்றியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான உத்தரவுகளைப் பிறப்பித்தவர். பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கி அதிகாரத்தில் பங்கேற்கச் செய்தவர்.

உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியவர். மருத்துவக் கல்வி-வேலைவாய்ப்புகளில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கத் தடையாக இருந்தவற்றைத் தகர்த்தெறிந்தவர். 'பனகல் அரசர்' குறித்த புத்தகம்தான் திருவாரூர் பள்ளியில் தலைவர் கலைஞருக்கு அரசியல் அரிச்சுவடியாகி சுயமரியாதை இயக்கத்தை நோக்கி ஈர்த்தது.

மக்களாட்சியின் காவலராகச் செயற்கரிய செய்த பனகல் அரசரின் செயல்களைப் போற்றி, எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் பயணிப்போம்! என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து

ABOUT THE AUTHOR

...view details