சென்னை: அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று (டிசம்பர் 23) நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வந்தனர். அதனைத் தொடர்ந்து ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் அணிவித்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அனுமன் ஜெயந்தி விழா; ஆளுநர் சாமி தரிசனம் - ராமநாம பஜனை
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.
அனுமன் ஜெயந்தி விழா; ஆளுநர் சாமி தரிசனம்
அதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது துணைவியாரும் வந்திருந்தார்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களின் தினக்கூலியை இடைக்காலமாக உயர்த்த உத்தரவு: நீதிமன்றம்