கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் பலரின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறு குறு தொழில்கள் பல முடங்கியுள்ளன. குறிப்பாக, ஊரடங்கால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! - tn announced 2 thousand ruppes for handloom and weavers
சென்னை: கைத்தறி நெசவாளர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
tn
வேலையிழந்த தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு கால நிவாரணத் தொகையாக, கைத்தறி நெசவாளர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:'விலைவாசி ஏறுது எங்க கூலி உயரல' - நெருக்கடியில் உழலும் நெசவாளர்கள்!