தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போர் வாகனங்கள் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த பொருள்கள் ஒப்படைப்பு! - போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

சென்னை: போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த பொருள்கள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

cvrde
cvrde

By

Published : Jan 11, 2021, 6:20 AM IST

தபாஸ் மற்றும் விரைவு ஆளில்லா விமானங்களின் சக்கர அமைப்புகள், பி-75 ரக நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான 18 வகையான பில்டர்களை ஒப்படைக்கும் விழா, சென்னையில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஆய்வகத்தில் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்றது.

பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) தலைவர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி, கவச இன்ஜினியரிங் அமைப்பின் (ஏசிஇ) திரு. பி.கே. மேத்தா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு வடிவமைப்பு முயற்சிகளின் முக்கியத்துவத்தை டிஆர்டிஓ தலைவர் எடுத்துக் கூறினார். இதுபோன்ற முக்கியப் பாகங்களின் தயாரிப்பு மையங்களை ஏற்படுத்திய தொழில் துறையினரைப் பாராட்டினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details