தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கிருமி நாசினிகள்' - நன்மைகளும் தீமைகளும் குறித்த சிறப்புச் செய்தி - கிருமிநாசினிகள் பயன்பாடு

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய ஒன்றான ஹாண்ட் சானிடைசர்கள் (கிருமி நாசினி) பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்த சிறப்புத் தொகுப்பு...

hand-sanitizer-special
hand-sanitizer-special

By

Published : Jun 20, 2020, 8:45 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் மிக முக்கியமாக முகக் கவசம் அணிவது, சோப்பு அல்லது கிருமி நாசினிகள் கொண்டு அடிக்கடி கைகளை கழுவுவது பிரதானமாக உள்ளது.

அதனால் பெரும்பாலான மக்கள் ஹாண்ட் சானிடைசர் எனப்படும் கிருமி நாசினிகளை பயன்படுத்திவருகின்றனர். கிருமி நாசினிகளைப் பயன்படுத்துவதால் வைரஸ் பரவலிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். அப்படியிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்தும் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக, 100 விழுக்காட்டில் 10 விழுக்காடு பேருக்கு கிருமி நாசினிகளால் அலர்ஜி ஏற்படும் என பல ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன. அது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பிரபல தோல் மருத்துவர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், "தற்போதைய கரோனா வைரஸ் பரவல் சூழலில் மக்கள் அனைவரும் கிருமி நாசினிகள் பயன்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றுதான்.

ஏனென்றால் அசுத்தமானப் பகுதிகள், அனைவரின் தொடுதலுக்குட்பட்டப் பகுதிகளை நாம் அணுகும்போது எளிதில் கைகளில் கிருமிகள் பரவிக்கொள்ளும். அதனால் நாம் கிருமி நாசிகளைப் பயன்படுத்துதல் வேண்டும். அதேநேரத்தில் கிருமி நாசிகளில் ஆல்கஹால் உள்ளிட்ட பல்வேறு வகை அமிலங்கள் சேர்க்கப்படுவதால் மிகவும் மென்மையான தோல் உடையவர்கள், ஏற்கனவே தோல் அலர்ஜி உள்ளவர்களுக்கு அரிப்புகள், புண்கள் உள்ளிட்டவை ஏற்படலாம்.

அதை தவிர்க்க அவர்கள் துணி துவைக்கும் சோப்புகளை பயன்படுத்தி கைகளை கழுவினால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சரியாகச் சொன்னால் கிருமி நாசினிகள் வைரஸைக் அழிக்கும், ஆனால் அவைகள் கைகளிலேயே தங்கிவிடும். எனவே, கிருமி நாசிகள் பயன்படுத்தியப் பின்பு சோப்பினால் கைகழுவும் போது கைகளில் தேங்கியுள்ள இறந்த வைரஸ்கள் முற்றிலும் அகற்றப்படும்.

எனவே, முடிந்த வரை தினமும் சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால், அனைத்து நேரங்களிலும் நாம் சோப்புகள் பயன்படுத்த முடியாது என்பதே உண்மை" எனத் தெரிவித்தார். அதையடுத்து அவர், சுடு தண்ணீர் மூலம் கை கழுவுவதும் நல்ல பலனை கொடுக்கும்" எனக் கூறினால். மேலும், "குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோருக்கும் கிருமி நாசிகள் எளிதில் அலர்ஜியை ஏற்படுத்தும்.

அவைகளுக்கு மாற்றாக சோப்புகளை பயன்படுத்துவது நல்லது அவர்களை முடிந்தவரை பலராலும் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் தொடுதல், பொது இடங்கள் செல்லுதல் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் தற்போதைய சூழலில் கிருமி நாசினிகள், தகுந்த இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குப் பதிலாக, அரசு கூறுவது போல் தனித்திருத்தல், வீட்டிலேயே இருத்தல், விழித்திருத்தல் மிகச் சரியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்ட தலைமைச் செயலகம்!

ABOUT THE AUTHOR

...view details