சென்னை திரிசூலத்தில் இருந்து ஜி.எஸ்.டி சாலை நோக்கி செல்லும் வழியில், டி.எஸ்.பி சுந்தரம் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதன் அடிப்படையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருவரும் திரிசூலத்தைச் சேர்ந்த மாசிலாமணி, பல்லாவரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. அவர்கள் பையில் ஒரு அடி உயரமுள்ள பீடத்துடன் கூடிய கிருஷ்ணர் சிலையின் ஒரு கை அறுக்கப்பட்ட நிலையில் இருந்ததும், அதனை விற்பதற்காக இருவரும் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.