தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரையைக் கடந்தது ஹமூன் புயல்.. தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Hamoon Cyclone made landfall: ஹமூன் புயல் வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது என்றும் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Hamoon Cyclone made landfall
கரையைக்கடந்தது ஹமூன் புயல்.. தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 10:40 AM IST

சென்னை: மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஹமூன் புயலாக மாறிய நிலையில் நேற்று (அக் 24) அதிதீவிர புயலாக மாறி பின்னர் மிகத்தீவிர புயலாக மாறியது. இந்த ஹமூன் புயல் இன்று (அக் 25) ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கதேசத்தில் கெபுரா - சிட்டகாங் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (அக் 24) தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தீவிர புயலாக இருந்த 'ஹமூன்' வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையைக் கடந்ததாகவும் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்த புயலின் தாக்கத்தினால் தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஒருநாளுக்கு முன்னதாகவே தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதையும் படிங்க:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை இசை வழிபாடு! இசையின் வாயிலாக அம்பாளை தரிசித்த பக்தர்கள்!

ABOUT THE AUTHOR

...view details