தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

46th Chennai Book Fair: 46-வது புத்தகக் காட்சியில் வித்தியாசமான அரங்குகள் - சென்னை செய்திகள்

சென்னை அருகே நந்தனத்தில் 46-வது புத்தகக் காட்சியில் பல அரங்குகள் மக்களை கவரும் வகையிலும் வித்தியாசமான வரையில் உள்ளது. அரங்குகள் 800லிருந்து கூடுதலாக 200 அரங்குகள் அதிகப்படுத்தப்பட்டு மொத்தம் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

46-வது புத்தகக் காட்சியில் வித்தியாசமான அரங்குகள்
46-வது புத்தகக் காட்சியில் வித்தியாசமான அரங்குகள்

By

Published : Jan 10, 2023, 6:10 PM IST

சென்னை அருகே நந்தனத்தில்46-வது புத்தகக் காட்சி (46th Chennai International Book Fair) ஜனவரி 6 முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை, காலை 11 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 800 அரங்குகளாக இருந்தது. இந்த ஆண்டு, 200 அரங்குகள் அதிகப்படுத்தப்பட்டு மொத்தம் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல அரங்குகள் மக்களைக் கவரும் வகையிலும் வித்தியாசமான முறையில் உள்ளது.

அதன் விவரம், அரங்கம் எண் - 28:முதல்முறையாக திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட அரங்கம், இந்த அரங்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திருநங்கைகள், திருநம்பிகள், தன் ஈர்ப்பு பாலினம் தொடர்பாக புத்தகம் உள்ளது. கிட்டத்தட்ட 20 எழுத்தாளர்களின் புத்தகம் இந்த அரங்கத்தில் உள்ளது.

46-வது புத்தகக் காட்சியில் வித்தியாசமான அரங்குகள்

அரங்கம் எண் - F14 ,13: சர்வேதேச புத்தகம் அரங்கம், இந்த அரங்கத்தில் பல தலைப்பில் சர்வதேச புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

அரங்கம் எண் - 531: இது குழந்தைகளுக்கு எனப் பிரத்யேகமான புத்தக அரங்கம் ஆகும். இந்த அரங்கத்தில் குழந்தைகளுக்கு எனப் பல புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக சிறு கதைகள், வரலாற்றுப் புத்தகம், பொதுஅறிவு புத்தகம் எனப் பல தலைப்பில் உள்ளது. குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ணங்கள் நிறைந்த பொம்மைகளை கொண்ட புத்தகமும் விற்பனையில் உள்ளது.

46-வது புத்தகக் காட்சியில் வித்தியாசமான அரங்குகள்

அரங்கம் எண் - 486: இந்த அரங்குகளிலேயே சற்று வித்தியாசமானது. இங்கு 7 அடி நீளத்திற்கு சுவற்றில் ஒட்டும் பொம்மைகளைக் கொண்ட wall roll விற்கப்படுகிறது. இந்த wall roll-களை சுவற்றில் ஒட்டிவிட்டால் சிறு குழந்தைகள் எத்தனை முறை வேண்டுமானாலும் வண்ணம் தீட்டலாம், அதுமட்டுமின்றி எந்த வண்ணம் தீட்டலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் பிரத்யேகமாக செயலி உள்ளது.

46-வது புத்தகக் காட்சியில் வித்தியாசமான அரங்குகள்

அரங்கம் எண் - 454,455:இந்த அரங்கில் சினிமா தொடர்பாக பெரும்பாலான புத்தகங்களும் விற்கப்படுகிறது. திரைக்கதை குறித்து, சினிமா அரசியல் குறித்து என சினிமாவிற்கு தொடர்புடைய பெரும்பாலான புத்தகமும் விற்கப்படுகிறது.

46-வது புத்தகக் காட்சியில் வித்தியாசமான அரங்குகள்

அரங்கம் எண் - 286:புத்தகம் வாங்குவதற்கு புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள். ஆனால் இந்த அரங்கம் பொதுமக்களிடம் இருந்து புத்தகங்களைப் பெறுவதற்கு அமைக்கப்பட்டுள்ளது. சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பாக 'சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்வீர்' என்ற அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் இருக்கும் நபர்கள், புத்தகம் படித்து, தங்களது சிந்தனையை மாற்றிக்கொள்வார்கள் என்ற நோக்கத்தோடு இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அரங்கம் எண் 589-590: 642-642 : 195-196:இந்த அரங்குகளில் சூழலியல் சார்ந்த தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் விற்கப்படுகிறது.

46-வது புத்தகக் காட்சியில் வித்தியாசமான அரங்குகள்

'முடிந்த அளவிற்கு அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் புதிய புதிய அரங்குகளை அமைத்து வருகிறோம், சிறிய பதிப்பகங்களை ஊக்குவிக்கும் வகையில் 20 மினி ராக் அமைத்து இருக்கிறோம்' என பபாசி அமைப்பின் செயலாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"யூடியூப் ஷார்ட்களில் விளம்பரங்கள்" - கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு குட் நியூஸ்!

ABOUT THE AUTHOR

...view details