தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை - மழையில் நனைந்தபடி வீடு திரும்பிய மாணாக்கர்கள் - Half day holiday for schools in Chennai

சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து, அதனை அவசரமாக செயல்படுத்தினார். இதனால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்து வீடு திரும்பும் சூழல் ஏற்பட்டது.

Etv Bharatசென்னையில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி
Etv Bharatசென்னையில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி

By

Published : Dec 12, 2022, 5:07 PM IST

சென்னை: சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’கனமழை எச்சரிக்கை காரணமாக (12.12.2022) இன்று அரை நாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தொடர்ந்து காலை முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், மதியம் 1 மணி அளவில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மழையில் நனைந்தபடியே வீட்டிற்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது.

இதையும் படிங்க:தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details